நடிகர் சிவாவின் பிம்பிலிக்கு பிலாபி பாடல்…. யூடியூபில் புதிய சாதனை….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூல் செய்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படங்களை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் மற்றும் மாவீரன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் பிரின்ஸ் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இந்த படத்தில் உக்ரைன் அழகி மரியா ஹீரோயின் ஆக நடிக்க, சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தமன் இசையமைப்பில் அனிருத் குரலில் வெளியான பிம்பிலிக்கு பிலாபி பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பாடல் ஆதித்யா மியூசிக் சார்பில் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பிம்பிலிக்கு பிலாபி பாடல் 7.2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது பிம்பிலிக்கி பிலாபி பாடல் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பாடல்களில் அதிகம் பார்க்கப்பட்டவை ஆகும். மேலும் பிம்பிலிக்கு பிலாபி பாடல் யூடிபில் நல்ல வரவேற்பை பெற்றதால் பிரன்ஸ் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.