நடிகர் சிம்புவின் ‘ஈஸ்வரன்’… படத்தின் இசையமைப்பாளர் வெளியிட்ட தகவல்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

இசையமைப்பாளர் தமன் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இந்தப் படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து  போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை வருகிற பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் சிங்கிள் ‘தமிழன் பாட்டு’ வெளியானது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தது ‌. இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் தமன் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் முடிந்துவிட்டதாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார் .