நடிகர் உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’… அனல் பறக்கும் மோஷன் போஸ்டர்…!!!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும், பாடலாசிரியராகவும் அசத்தி வருபவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் வெளியான கனா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருண்ராஜா காமராஜ்  உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஷிவானி ராஜசேகர், ஆரி அர்ஜுனன், மயில்சாமி, இளவரசு, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‘நெஞ்சுக்கு நீதி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதிரடியான இந்த மோஷன் போஸ்டர் தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *