தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்கு விபத்து ஏற்பட்டதால் கேரளாவில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை முடிந்து அருண் விஜய் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய நிலையில் தற்போது அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் அருண் விஜய் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
It's a wrap!!📽🎬 #AchchamEnbadhuIllayae
Was a wonderful journey working with #DirectorVijay and his talented team. Thanks to @iamAmyJackson, #nimishasajayan, @silvastunt and all the others who worked hard to bring the director's huge vision to a grand reality! Can't wait!!🤞🏽✌🏽 pic.twitter.com/ZNEfrYffxf— ArunVijay (@arunvijayno1) February 23, 2023