நடிகர் அமீர்கானின் 57-வது (மார்ச் 14) பிறந்தநாள்…. இந்த வருடம் கண்டிப்பாக ஸ்பெஷல் தான்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அமீர்கான். இவர் நடிப்பில் கடந்த வருடம் லால் சிங் தத்தா என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் படுதோல்வி அடைந்ததால் நடிகர் அமீர்கான் ஒரு வருடத்திற்கு சினிமாவை விட்டு விலகி இருப்பதாக அறிவித்தார். நடிகர் அமீர் கானுக்கு வருகிற மார்ச் 14-ஆம் தேதி பிறந்தநாள் வர இருக்கிறது. நடிகர் அமீர்கான் வருடம் தோறும் தங்களுடைய பிறந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாடுவார்.

அந்த வகையில் இந்த வருடமும் நடிகர் அமீர்கான் தன்னுடைய பிறந்த நாளை சிறப்பான முறையில் கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1965-ம் ஆண்டு மும்பையில் பிறந்த நடிகர் அமீர் கானுக்கு தற்போது 57 வயது ஆகிறது. நடிகர் அமீர்கான் முதலில் ரேனா தத்தா என்பவரை கடந்த காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதன் பிறகு 2-வதாக ஒருவரை அமீர்கான் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரையும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். நடிகர் அமீர்கானுக்கு ஜுனைட் கான் மற்றும் ஐரா கான் என்ற இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.