தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவரை தல என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள். இவர் விடாமுயற்சிக்கும் கடின உழைப்புக்கும் பெயர் போனவர் என்று சொன்னால் மிகையாகாது. நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேஸர். இதை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்நிலையில் நடிகர் அஜித் பற்றி அவருடைய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நரேஷ் பத்மநாதன் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
அதாவது நடிகர் அஜித் தற்போது உயிர் வாழ்வதற்கு மருத்துவர்கள் மட்டும் தான் காரணம் என்று கூறியுள்ளார். ஏனெனில் நடிகர் அஜித்துக்கு பலமுறை விபத்துகள் ஏற்பட்டுள்ளதால் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வலிமை படத்தின் அனைத்து ஸ்டண்ட் காட்சிகளையும் அவரே டூப் போடாமல் செய்திருப்பார். அப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியில் ஈடுபடும் போது அவருக்கு உண்மையாகவே விபத்து ஏற்பட்டது. இதனால் அவரின் முதுகு தண்டுவடத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டது. அவரை அழுத்திக் கொண்டிருந்த ஒரு எழும்பும் அகற்றப்பட்டது.
அவருடைய முதுகெலும்பில் கிட்டத்தட்ட 2 ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று கை, கால்கள், மூட்டு போன்ற உடலின் பல்வேறு இடங்களில் பல ஆப்ரேஷன்கள் செய்யப்பட்டுள்ளது. அப்படி ஒரு ஆபரேஷன் செய்யும் போது அவருக்கு பக்கவாதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் மருத்துவர்களால் அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். அவர் ரசிகர்களுக்காக தன்னுடைய முழு பங்களிப்பையும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் படங்களில் டூப் போடாமல் நடிக்கிறார். மேலும் இதனால் அவர் உயிருக்கு ஏற்படும் ஆபத்தை கூட அவர் பொருட்படுத்தவில்லை. தற்போது அவர் உயிர் வாழ்வதே மருத்துவரால் தான் என்று கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.