நடிகர் அஜித்துக்கு பதிலாக நடித்த அர்ஜுன்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அர்ஜுன் நடிப்பில் வெளியான மருதமலை படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜித்குமார் என்றும் ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படத்தில் அஜித்தால் நடிக்க முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது.