நடிகர்கள் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும்… சீமான் அதிரடி…!!!

இந்த தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடியை பார்த்து எந்த நடிகர்களும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை விமர்சித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். பரப்புரையில் எம்ஜிஆர் குறித்து பேசினால் அதிமுகவிற்கு தான் ஓட்டு விழும், கமல் இது தெரியாமல் இருக்கிறார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். அரசியலை தெரியாமல் பேசும் கமல் மக்களை கேவலமாக நினைக்கிறார் என்றும், இந்தத் தேர்தலில் ரஜினி மற்றும் கமலுக்கு கிடைக்கும் அடியை பார்த்து எந்த நடிகர்களும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.