நடவடிக்கை எடுங்க…. இந்திய ஜனநாயக சங்கத்தினரின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

தாலுகா அலுவலகத்திற்கு  முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்திற்கு முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது மாவட்ட துணை அமைப்பாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு நிதி அளித்து இன்னும் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். களத்தூர் மின் நிலையத்தின் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டமானது நடைபெற்றுள்ளது.

மேலும் இந்த போராட்டத்தில் மாநிலச் செயலாளர் பாலா, மாநிலத் துணைச் செயலாளர் சிங்காரவேலன் மற்றும் மாவட்ட அமைப்பாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து வேப்பந்தட்டை தாசில்தார் சரவணன் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி  அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *