தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் நடன இயக்குனராகவும் திகழ்பவர் பிரபுதேவா. இவர் ஹிந்தியிலும் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் விஜய் நடிக்கும் தி கோட் படத்தில் பிரபுதேவா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஜே சீனு இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா தற்போது பேட்ட ராப் என்ற படத்தில் நடித்துவரும் நிலையில் அவருடன் வேதிகா மற்றும் சன்னி லியோன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கும் நிலையில் படத்தின் சூட்டிங் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் தற்போது பேட்டராப் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் நடன புயல் பிரபுதேவா நடிக்கும் பேட்டராப் படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள நிலையில் இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.