நடந்து சென்ற செக்யூரிட்டி…. வேகமாக வந்த வாகனம்…. விருதுநகரில் கோர விபத்து…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் நடந்து சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெள்ளாளன்கோட்டை கிராமத்தில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சுழியில் உள்ள தனியார் பஞ்சாலையில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணியை முடித்துவிட்டு ராஜகோபால் திருச்சுழி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ராஜகோபால் மீது மோதி விட்டு நிற்காமல் போனது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜகோபால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜகோபால் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *