நகை தள்ளுபடி ரசீது கொடுக்கல…. எங்களை அலைக்கழிக்கிறாங்க…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்….!!

கூட்டுறவு வங்கிகளின் முன்பு நகை கடன் தள்ளுபடியில் குளறுபடி இருப்பதாக  கூறி  பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது  ]தி.மு.க  வாக்குறிதியாக  தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் நகை அடகு வைத்திருப்பவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில் தி.மு.க அரசு தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால் நகை கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது. ஆனால் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. அது குறித்து விசாரணை நடந்த பின்னரே நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தி.மு.க அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது ஒவ்வொரு வங்கிகளிலும் தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடியாகும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுத்து நகை கடன் தள்ளுபடி செய்ததற்கான ரசீது வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வத்திராயிருப்பு அருகிலுள்ள மகராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 5 பவனுக்கு கீழ் நகை கடன் இருப்பவர்களுக்கு நகையை தள்ளுபடி செய்ததற்கான ரசீது வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் 50க்கும மேற்பட்ட கிராம மக்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்து வங்கியை  முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் செய்த பொதுமக்களிடம் வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் பாலாஜி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பிரகஸ்பதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து வத்திராயிருப்பு கிராம மக்கள் போராட்டத்தை கை விட்டுச்சென்றனர். அதேபோல்திருச்சுழி தமிழ் பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியையும் நேற்று நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்பாடி கிராம மக்கள்கூறுகையில் , “தமிழ் பாடி , கரிசல்குளம், ஆலடிப்பட்டி, ராமசாமி பட்டி, சித்தலக்குண்டு, ஒத்தவீடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பலர் நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளோம். ஆனால் தமிழ்பாடி பகுதியிலுள்ள கூட்டுறவு வங்கியில் பல்வேறு நபர்களுக்கு தள்ளுபடி இல்லை என்று வங்கி அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மேலும் உள்ளூர் கிராம மக்களை அலைக்கழித்து வருகிறார்கள்”என்று வங்கி அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினார்கள். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பவ விரைந்து வந்தனர். பின்னர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *