தோழி வீட்டிற்கு நம்பி சென்ற பெண்….” 4 நண்பர்கள் சேர்ந்து செய்த கொடுமை”… கொடூரத்தின் உச்சம்..!!

நாக்பூரில் தோழியை பார்க்க சென்ற சிறுமிக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரில் உள்ள கணேஷ் நகரில் பெற்றோருடன் வசித்து வரும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி தன்னுடன் படிக்கும் தோழி ஒருவருடன் மிக நெருங்கி பழகி வந்துள்ளார். இதையடுத்து அந்த தோழியை சந்திக்க கடந்த செவ்வாய்க்கிழமை அவரின் வீட்டிற்கு சென்றபோது தோழி தனது காதலன் என்று கூறி அமித்  என்ற நபரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அவர் தட்டு என்பவர் அங்கு வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் ஒரு அறைக்குள் இழுத்துச் சென்று, நான்கு நண்பர்கள் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர், இதை கதறித் துடித்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு வந்து தனக்கு நடந்த கொடுமையை கூறியுள்ளார். இதையடுத்து பதறிப்போன பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.