தோல்வியுடன் தொடங்கிய இந்தியா… நெதர்லாந்து அபார வெற்றி…!!!

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில், மகளிர் ஹாக்கிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. ஆட்டத்தின் பாதி நேரம் வரை 1-1 என்ற சமநிலையில் இருந்தது. ஆனால் மூன்றாம் குவாட்டரில் 3 நிமிடங்களில் நெதர்லாந்து 2 கோல் அடிக்க இந்திய அணியால் எதிரணியின் வெற்றியை தடுக்க முடியவில்லை. இந்தியாவுக்காக கேப்டன் ராணி ராம்பால் ஒரு கோல் அடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *