ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஹைதராபாத் அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த நிலையில் 114 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த அணியின் உரிமையாளர் காவியா மாறன் கண்ணீர் விட்டு அழுதார்.

அதை மறைத்து சிரித்தபடியும் அவரது அணியின் வீரர்களுக்கு கைதட்டி வரவேற்பு கொடுத்தார். இவர் கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது. தற்போது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.