தோல்வியடைந்த போர்!…. ரஷ்யாவுக்கு சாதகமான அடுத்த செயல்…..!!!!!

வலிமையான நாடு என்று கருதப்படும் ரஷ்யா எளிதாக உக்ரைனை வென்று விடலாம் என எண்ணி அந்நாட்டுக்குள் ஊடுருவ, உக்ரைன் எதிர்பார்க்க முடியாத எதிர்ப்பைக் காட்டியது. அதாவது ஏராளமான படைவீரர்கள், போர் வாகனங்கள், முக்கியமான தளபதிகள் என கடுமையான  இழப்பை ரஷ்யா சந்தித்தது. அது வெறும் இழப்பு மட்டும் அல்ல, தான் ஒரு வலிமையான நாடு, பெரியநாடு என்ற திமிரில் ஆணவமாக போரைத் தொடங்கிய ரஷ்யாவுக்கு உலக அரங்கில் பெரும் அவமானமே பரிசாகக் கிடைத்தது. ஆகவே தன்மானப் பிரச்சினையாகிவிட்ட உக்ரைன் போரை எப்படியாவது வென்றே ஆகவேண்டும் என ரஷ்யா தீவிரமாக முயன்று வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 30 லட்சம்  உக்ரைனிய அகதிகள் போலந்துக்கு தப்பிச்சென்றுள்ளதாக போலந்து எல்லை படையினர்  கூறியுள்ளனர்.

இந்த நிலையில் புதினுடைய படைகள் வேகமாக முன்னேறி வருவதாகவும், இப்போது ஒரு உக்ரைன் வீரர் இருந்தால், ரஷிய தரப்பில் அந்த ஒரு வீரரை எதிர்க்க 3 ரஷ்யப்படையினர் உள்ளதாகவும் மேற்கத்திய நாடுகளின் நிபுணர்கள்  கணித்துள்ளனர். உக்ரைன் நாட்டால் ரஷ்யா அவமானப்படுத்தப்பட்டு வருவது உண்மைதான் என்றாலும், அவர்கள் போரில் வெற்றிஅடையும் நிலையில்தான் இதுவரை இருக்கிறார்கள் என்று மேற்கத்திய நாடுகளின் அலுவலர்கள் எச்சரித்துள்ளனர். ரஷ்யா அவமானத்துக்குரிய அடிப்படையில் உக்ரைன் வீரர்களால் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், இப்போது நிலைமையை ரஷ்யாவுக்கு சாதகமாக மாற்றி இருக்கிறார் ‘கசாப்புக்கடைக்காரர்’ என வர்ணிக்கப்படும் ரஷ்ய தளபதி ஒருவர். கடந்த 15 தினங்களுக்கு முன்பு உக்ரைன் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஜெனரல் அலெக்சாண்டர் டுவோர்னிகோவ் என்ற தளபதிதான் போர் திட்டத்தை  மாற்றி புதினுடைய வெற்றிக்கு வழிவகுத்துள்ளார் என்று மேற்கத்திய நாடுகளின் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

உக்ரைன் ரஷ்யப் போரில் புதிய அத்தியாயம் ஒன்று தொடங்கியுள்ளதாக தெரிவிக்கும் அவர்கள், முன் தோல்விகளை சந்தித்தாலும் புதின் தற்போது வெல்லும் நிலையில்தான் இருக்கிறார் என்கிறார்கள். கீவ் நகரை  கைப்பற்ற முயற்சி செய்து தோல்வியடைந்த ரஷ்யப் படைகள் தற்போது டான்பாஸ் பகுதியைக் குறி வைத்து தாக்கி வருகின்றன. ஆகவே பெரிய பகுதிகளைக் கைப்பற்ற முடியா விட்டாலும், சிறு சிறு பகுதிகளாக கைப்பற்றும் முயற்சியில் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் மே மாதம் 9 ஆம் தேதி 2ம் உலகப்போரில் நாசிக்களை வென்றதைக் கொண்டாடவுள்ள ரஷ்யப் படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிட இருக்கும் புதின், ரஷ்யப் படைகள் உக்ரைனில் அவமானப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மாஸ்கோவில் தனது வெற்றி விழா பேரணியின் முன் நிற்க விரும்பமாட்டார். எனவேதான் அதற்கு முன் டான்பாஸ் பகுதியையாவது கைப்பற்றிவிடவேண்டும் என்ற முடிவுடன் ரஷ்யப் படைகள் அப்பகுதியைக் குறி வைத்து வருகின்றன என்று மேற்கத்திய நாடுகளின் நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.