மே 18 ஆன இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சூடு பறக்கும் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும். அதிலும், ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களுக்குள் ஆட்டத்தை வென்றால் மட்டுமே அவர்கள் உள்ளே நுழைவதற்கான வாய்ப்பு அதிகம். இந்நிலையில் போட்டி குறித்து பல தகவல்கள் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் மே 18 தேதிகளில் விராட் கோலி அடித்த ரன்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி 2013இல் சிஎஸ்கேக்கு எதிரான போட்டியில் 29 பந்துகளுக்கு 56 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் 2016ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 50 பந்துகளுக்கு 114 ரன்கள் அடித்து விலாசியுள்ளார்.

அதேபோல் 2023 SRH அணிக்கு எதிரான போட்டியில் 63 பந்துகளுக்கு 100 ரன்கள் அடித்துள்ளார். முக்கிய குறிப்பு என்னவெனில் இதுவரை மே 18 அன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் ஆர் சி பி அணி தோற்றதே இல்லை என்பது வரலாறு என நெட்டிசன்கள் தங்களது ஆரவாரத்தை பதிவிட்டு வருகின்றனர்.