“தோற்றுவிட்டால் செத்துருவேன்” என்னோட முடிவு உங்க கைல தான் – விஜயபாஸ்கரின் வைரல் போஸ்டர்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் விராலிமலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இரண்டு முறை வெற்றி பெற்றார். ஆனால் அவருக்கு போட்டியாக தற்போது திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் கலமிறங்கியுள்ளார். இதையடுத்து பிரச்சாரத்தில் தென்னலூர் பழனியப்பன் கண்கலங்கியபடி தன்னை வெற்றிபெற வைக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் தான் தோற்றுவிட்டால் உயிரை விட்டுவிடுவேன் என்று மக்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து விஜய பாஸ்கரும் தனக்கு பிபி, சுகர் எல்லாம் இருக்கிறது இருந்தாலும் உங்களுக்காக உளைகிறே என்று கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் வெறும் 10 நாட்கள் தேர்தலுக்காக ஊருக்குள் வந்து ஓட்டு கேட்பவர்கள் தோல்வியடைந்தால் உயிரை விட்டுவிடுவேன் என்று கூறுகின்றனர். பத்து வருடங்களாக வாக்களித்த மக்களுக்காக இரவு பகல் பாராமல் ஒவ்வொரு கஷ்டகாலத்திலும் உழைத்த  என்னுடைய முடிவு எப்படி இருக்கும்? அது உங்கள் கையில் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் விஜயபாஸ்கர் சோகமாக இருக்கும் படியான ஒரு புகைப்படமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.