பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை. CSK வீரர் தோனி அடுத்த வருடம் சிஎஸ்கே அணியில் காண வேண்டும் என நினைக்கிறார்கள்.

இன்னொரு வருடம் தோனி விளையாடினால் நன்றாக இருக்கும் என ஆசைப்படுகிறீர்கள். அதேபோல மோடிஜி அவர்களை பொறுத்தவரையில் 75 வயதை தாண்டினாலும் அவர்தான் பிரதமர். 2029 லும் அவர்தான் பிரதமர். அவர் வயதை கணக்கிடுகிறீர்கள் ஆனால் அவருடைய உடல் பலத்தை கணக்கில் கொள்வதில்லை. தவ வலிமையை கணக்கில் கொள்ளுங்கள். என தெரிவித்துள்ளார்.