தோட்டத்திற்கு சென்று முதியவர் செய்த செயல்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

நெல்லையில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 62 வயது மதிக்கத்தக்க சாமிகண் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் இளநீர் கடையை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து இவருக்கு கடந்த சில தினங்களாகவே உடல் நல குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதில் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு சென்ற அவர் வீட்டில் யாருமில்லாத போது அருகிலிருந்த தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *