தோட்டத்திற்கு அழைத்து சென்ற முதியவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருக்களப்பூர் கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சண்முகம் அதே பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமியை தோட்டத்திற்கு  அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதியவரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *