தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. மாட்டு வியாபாரியின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாட்டு வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் மாட்டு வியாபாரியான அம்சாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக தொழில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அம்சாத்  நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *