தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில், சென்னை பல்கலைக்கழக தொலைதூர படிப்பில் அடுத்த ஆண்டு முதல் B.Sc(data science), MBA (data analytics) தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு திறன், தொழில் முனையும் திறனை மேம்படுத்தும் வகையில் பாலிடெக்னிக் கல்லூரிகளின் பாடத்திட்டம் மறுசீராய்வு செய்யப்பட உள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.