தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருடந்தோறும் புத்தாண்டு அன்று கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம் ஆகும். அதன்படி 2023 ஆம் வருடம் புத்தாண்டில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க இருப்பதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும் இருந்து வந்த 1000-க்கும் அதிகமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தேமுதிக தலைமை கழகத்தில் இன்று காலை முதலே குவிந்தனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் தொண்டர்களை நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். தற்போது விஜயகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை சக்கர நாற்காலியில் அமர வைத்து அவரது மகன்கள் அழைத்து வந்தனர். இதற்கிடையில் தொண்டர்களை பார்த்து மிகவும் சிரமப்பட்டு கையை அசைத்த விஜயகாந்த்தின் நிலையை கண்டு அங்கிருந்தவர்கள் கண்ணீர் வடித்தனர்.