தொடர் விடுமுறை…. திருப்பதியில் அலை மோதும் கூட்டம்….. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்…!!!

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.

இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை உள்ளதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. ஏழுமலையானை தரிசிக்க சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் பக்தர்கள் காத்துக் கிடக்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் விஐபிகள் தரிசனத்துக்கான பிரேக் தரிசனம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளிக்கிழமை கோகுலாஷ்டமி உற்சவம் நடைபெற்றது. அங்கு கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் அங்குள்ள பசுக்களுக்கும் பூஜை செய்யப்பட்டது. திருமலையில் உள்ள கோசாலையிலும் திருப்பதியில் உள்ள கோசாலையிலும் பூஜைகள் நடைபெற்றன.