தொடர் விடுமுறை…. “அலைமோதிய பயணிகள் கூட்டம்”….!!!!!

தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த மக்கள் வேலை செய்து வருகின்றார்கள். விடுமுறை தினங்கள், பண்டிகை நாட்களில் அவரவர்களின் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கின்றார்கள். இந்த நிலையில் நாளை ஆயுதபூஜை மற்றும் நாளை மறுநாள் விஜயதசமி என இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்றது. முன்னதாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்களும் விடுமுறை.

மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று ரயில் நிலையத்தில் குவிந்தார்கள். இதனால் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. விடுமுறை தினம் என்பதால் அரசு சிறப்பு பேருந்துகளையும் இயக்குகின்றது. ஆகையால் பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.