“தொடர் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த இளைஞர்”…. கைது செய்த தனிப்படை போலீசார்….!!!!!!!

தொடர் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில மாதங்களாகவே தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போகும் சம்பவங்கள் நடந்து வந்தது. இதனால் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை போலீஸ் சரவணன் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.

இந்நிலையில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை சந்தேகத்தின் பெயரில் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சிங்கல்பாடி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும் அவர் பகலில் கட்டிட வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் ஒரு குறிப்பிட்ட கம்பெனி மோட்டார் சைக்கிள்களை மட்டுமே திருடியதும் தெரிந்தது. இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் 11 மோட்டார் சைக்கிள்களை மீட்டார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் மோகன்ராஜை கைது செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *