தொடர் சர்ச்சைகள்…. உச்சகட்ட வேதனையில் நடிகை ராஷ்மிகா மந்தனா…! சினிமாவை விட்டு விலகலா…?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பாலிவுட் என பல மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். நடிகை ராஷ்மிகா தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், நடிகை ராஷ்மிகா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார். குறிப்பாக ராஷ்மிகாவுக்கு கன்னட சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்தது. அதன் பிறகு தென்னிந்திய சினிமா பாடல்களை குறைத்து மதிப்பிட்டு பேசியது, விஜய் தேவரகொண்டாவுடன் காதல் என ராஷ்மிகா பற்றி அடிக்கடி சர்ச்சைகள் வந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நடிகை ராஷ்மிகா தன்னை பற்றி வரும் சர்ச்சைகள் பற்றி மன கலக்கத்துடன் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் உடற்பயிற்சி செய்தால் ஆண் போல் இருப்பதாக கூறுகிறார்கள். ஒருவேளை செய்யாவிட்டால் குண்டாக இருப்பதாக கூறுகிறார்கள். நான் அதிகமாக பேசினால் கிரிஞ்ச் என்றும் குறைவாக பேசினால் திமிரு என்றும் சொல்கிறார்கள். நான் மூச்சு விட்டாலும் அவர்களுக்கு பிரச்சனைதான் மூச்சு விடவில்லை என்றாலும் அவர்களுக்கு, நான் என்னதான் செய்வது. மக்கள் என்னைப் பற்றி கூறும் கருத்துக்கள் சரியானதாக இருந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன்.

ஆனால் தவறாக பேசுவது என் மனதை பாதிக்கிறது. என்னிடம் பிரச்சனை இருந்தால் அதை சொல்லுங்கள். அதற்காக துஷ் பிரயோகம் செய்யாதீர்கள். அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் நம்முடைய மனதை புண்படுத்துகிறது. நான் சினிமாவை விட்டு விலக வேண்டுமா அல்லது இருக்க வேண்டுமா என்று மனக்குமறலோடு பேசியுள்ளார். மேலும் இது தொடர்பான பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply