தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி தேவர் குருபூஜையை முன்னிட்டு அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர். அதனைப்போலவே அக்டோபர் 27ஆம் தேதியும் மருது சகோதரர்கள் குரு பூஜை நடைபெற உள்ளதால் அன்றைய நாளில் காளையார்கோவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *