தொடர்ந்து நடக்கும் குற்றங்கள்… போலீஸ் அதிரடி சோதனை… வசமாக சிக்கிய 4 பேர்…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்வதை தடுக்க திருச்செங்கோடு நகர காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே 2 பேர் மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் செங்கோடம்பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திக் மற்றும் முருகேசன் என்பது தெரியவந்துள்ளது.

இதனைதொடர்ந்து 2 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் திருச்செங்கோடு மலையடிவாரம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 14 மதுபாட்டிலை பறிமுதல் செய்த நிலையில் அதனை பதுக்கி வைத்திருந்த ஆட்டோ டிரைவர் கண்ணன் மற்றும் விசைத்தறி தொழிலாளி சுரேஷ்குமாரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *