தலைநகர் டெல்லியில் குளிரின் தாக்கம் சற்று குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நடைபாதை வாசிகளும், இரவு நேர காவலாளிகளும் இந்தக் குளிரால் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். கோடை காலத்தில் டெல்லியில் அதிக வெப்பமும் நிலவுவது போல் குளிர்காலத்தில் கடும் குளிர் வாட்டியுள்ளது. இந்த ஆண்டு குளிரின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. அங்குள்ள மக்கள் ஏற்கனவே காற்று மாசு பிரச்சினையால் சிக்கி தவித்து வரும் நிலையில் தற்போது குளிரும் சேர்ந்து வாட்டி வருகிறது.
நள்ளிரவில் இருந்தே எங்கு பார்த்தாலும் பனி சூழ்ந்து குளிர் வாட்டத் தொடங்கிறது. இன்று அதிகாலையிலும் பெரும்பாலான பகுதிகளில் மூடு பனி சூழ்ந்து காணப்படுகிறது. ஆனந்த விகார் போன்ற இடங்களில் வசிக்கும் நடை பாதை வாசிகளும் இரவு நேர காவலாளிகளும் இந்தக் குளிரை தாங்க முடியாமல் ஆங்காங்கே நெருப்பை மூட்டி சமாளிக்கின்றனர். கடும் குளிரிலிருந்து தப்பிக்க தற்போதைக்கு இது ஒன்றுதான் வழி என அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.