தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… தமிழக மக்கள் குஷி….!!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகின. அதில், தமிழகத்தில் மேலும் 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,53,449 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4 பேர்  பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,508 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 490 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,36,363 ஆக அதிகரித்துள்ளது. அதில், இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 50,051 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 1,72,63,648 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் தற்போது வரை 3,978 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *