நாடு முழுவதும் மழையின் காரணமாக வெங்காய விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக வெங்காய விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய விலை ஒரு கிலோ 80 முதல் 90 ரூபாய் வரையில் விற்பனையான நிலையில் இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி வெங்காயம் கிலோவுக்கு 100 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று சில்லறை விற்பனை கடைகளில் 120 முதல் 130 ரூபாய் வரையில் விற்பனையாகிறது. ஆனால் பசுமை பண்ணை கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் இன்னும் பருவ மழை நீடிப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு வெங்காயம் விலை உயர்ந்தே காணப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.