மகாராஷ்டிரா மாநிலத்தில் விக்ரம் பார்க் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 30 வயது ஆகும் நிலையில் தற்போது மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது. இவர் ஒரு பிரபலமான மல்யுத்த வீரர் ஆவார். இந்நிலையில் விக்ரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பால் இறந்துள்ளார். இவர் சற்று அதிகமாக வெயிட் டிரெய்னிங்கில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்த நிலையில் உடனடியாகஅங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். மேலும் சமீப காலமாக உடற்பயிற்சி செய்யும் போது இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பெரும்பாலும் உடற்பயிற்சி செய்யும் போது அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.