தொடங்கியது ‘கோவோவேக்ஸ்’ தடுப்பூசியின் ஆய்வு… ஆதர் பூனவல்லா தகவல்..!!

செப்டம்பர் முதல் கோவோவாக்ஸ் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சீரம் இந்தியா தலைமைச் செயல் அலுவலர் ஆதர் பூனவல்லா தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இருப்பினும் இவற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. நம் நாட்டில் ஏற்கனவே கொரோனாவிற்கு எதிராக இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது/ மூன்றாவதாக கோவாவாக்ஸ் என்ற பெயரில் புதிய தடுப்பூசி இரண்டாவது கட்ட பரிசோதனைக்கு தயார் படுத்தப்பட்டு உள்ளது. இது செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே கோவாக்சின், கோவிட்சில்டு என்ற இரண்டு தடுப்பூசிகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். புதிய கோவாவாக்ஸ் தடுப்பூசி வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று சீரம் இந்தியா தெரிவித்துள்ளது. நோவா வாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சீரம் தயாரித்த கோவாவாக்ஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை தொடங்கிவிட்டது என்றும், இதன் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு திறன் 89% காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.