தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கப்பள்ளி பட்டய பயிற்சியில் சேர்க்கை பெற விருப்பமுள்ள மாணவ மாணவிகள்  ஜூன் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2022-24ஆம் கல்வியாண்டுக்கான இரண்டு ஆண்டு தொடக்க கல்வி பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் https://scert.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் நாளை ஜூன் 5ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.