பிரபல விஜய் டிவியில் 20 வருடங்களுக்கும் மேலாக பிரபலமான தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் திவ்யதர்ஷினி என்ற டிடி. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில், தற்போது டிடி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் டிடி கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை விரைவில் மறுமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், இது குறித்து அவருடைய அக்காவும் நடிகையுமான பிரியதர்ஷினியிடம் கேட்கப்பட்டது. அதற்கு திவ்யதர்ஷினி இது போன்று வதந்திகள் வருவது வழக்கம்தான். இப்போது அதெல்லாம் பழகிவிட்டது என்று கூறினார். மேலும் இதன் மூலம் டிடிக்கு மறுமணம் என்று பரவிய தகவல்கள் முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.