“தொகுப்பாளினியிடம் அநாகரிமாக பேசிய பிரபல நடிகர்”…. முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல்….!!!!!

தொகுப்பாளினியிடம் அநாகரிகமாக பேசியதாக ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்ட நிலையில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மலையாள சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்கிறார் ஸ்ரீநாத் பாசி. இவர் 22 பீமேல் கோட்டயம், உஸ்தாத் ஓட்டல், கும்பளங்கி நைட்ஸ், வைரஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் நடித்த ‘சட்டம்பி’ திரைப்படம் அண்மையில் வெளியானது.
இதைதொடர்ந்து இவர் ‘சட்டம்பி’ படம் தொடர்பாக பிரபல மலையாள யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கின்றார். அப்போது பெண் தொகுப்பாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் கடுப்பான அவர், கேமராவை நிறுத்தும்படி கூறி, தொகுப்பாளர் மற்றும் அந்தக் குழுவை ஆபாசமாகத் திட்டி, மிரட்டியதாகக் சொல்லப்படுகின்றது.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீநாத் பாசியை கைது செய்து 3 மணி நேரம் விசாரணை செய்தார்கள். பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவர் மேல் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் தன்னை நேரில் சந்தித்து நடிகர் ஸ்ரீநாத் பாசி மன்னிப்பு கேட்டதாக கூறி பெண் தொகுப்பாளினி வழக்கை திரும்ப பெறுவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கின்றார். இதை தொடர்ந்து தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஸ்ரீநாத் பாசி மனு தாக்கல் செய்திருக்கின்றார்.