தேவாலயத்திற்கு அச்சுறுத்தல்…. மீட்டவர்கள் இவர்களா…. ஆச்சர்யமான தகவல்…!!

தேவாலயத்தை  ஆபத்துகளில் இருந்து மீட்டவர்கள் நாத்திகர்கள் என்ற தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஜெர்மனியில ஹேர்ஸ் என்ற இடத்தில் தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த இத்தேவாலயத்தை அழிக்க ஒரு கும்பல் முயற்சி செய்துள்ளது. அப்போது இந்த தேவாலயத்தை காப்பதற்காக சில மக்கள் முன்வந்துள்ளனர். அவர்கள் இந்த தேவாலயத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை. மேலும்  இந்த கூட்டத்தை சேர்ந்த ஹேண்ட்ஸ் பவல்லோ என்பவர் தான் ஒரு நாத்திகவாதி என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த தேவாலயமானது 1905-ம் வருடம் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப்பட்ட மருத்துவமனையின் அருகே அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்காவே வைக்கப்பட்டிருந்தது. ஆனால் 2009ஆம் வருடம் இந்த மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. இதனால் தேவாலயம் பராமரிக்காமல் விடப்பட்டுள்ளது. இதில் பலர் நாச வேலைகளை செய்துவந்துள்ளனர். இதனை தொடர்ந்து 2013ம் வருடம் இந்த தேவாலயத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தேவாலயத்திற்குள் சென்று பார்த்தபோது அருகில் இருந்த ஒரு கட்டிடத்தில் மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து திருப்தி அடைந்தனர். இதனால்  இந்த தேவாலயத்தை தங்கள் ஊருக்கு நகர்த்துவது என முடிவு செய்துள்ளனர். ஆனால் அதனை செய்ய பணம் மற்றும் இடம் தேவைப்பட்டுள்ளது. மேலும் பல அதிகாரிகளிடம் அனுமதியும் பெற வேண்டியிருந்தது. இதனை தொடர்ந்து இவர்கள் மேயரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்  மாகாண அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளார். முதலில் இதனை கேலி செய்தவர்கள் பின்பு ஒப்புதல் வழங்கியுள்ளனர். தேவாலயத்தை நகர்த்தும் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கு 1.1 மில்லியன் யூரோக்கள் செலவாகும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இந்த தேவாலயத்தை மீட்க போராடுவது கவனிக்கவேண்டியதாகும்.