சிவில் நீதிபதி தேர்வுக்கான தேதியை மாற்றி அறிவித்திருக்கிறது TNPSC. தமிழ்நாடு நீதிமன்றங்களில் குடிமையியல் நீதிபதியாக பணியாற்ற 245 காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இதற்கான தேர்வுகள் அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது நவம்பர் 4, 5 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத் தேதிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன.