11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சித்தநேந்தல் கிராமத்தில் விவசாயியான காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மகள் இருந்தள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேவி 3 பாடங்களில் தோல்வி அடைந்தார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த தேவி பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தேவியை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.