தேர்தல் முடியட்டும்…. தமிழகம் முழுவதும் வீடுவீடாக…! அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தேர்தலுக்கு பிறகு படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திரு.ராதாகிருஷ்ணன் தேர்தலை பாதுகாப்பாக நடத்த சுகாதாரத்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

தேர்தலில் வாக்களிக்க செல்லும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தேர்தலுக்கு பிறகு வீடு வீடாக சென்று காய்ச்சல் அறிகுறி உள்ள பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் திரு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.