நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக முன்னாள் படைவீரர்கள், சிறப்புக் காவலர்களாக பணியமர்த்த உள்ளனர். இதற்கு சென்னையைச் சேர்ந்த 65 வயதுக்கு உட்பட்ட அனைத்து முன்னாள் இளநிலை மற்றும் இதர தரத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். மேலும், இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 044-2235 0780 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.