நாமக்கல்லில் தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியருக்கு ரூ.15 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுமென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். நாமக்கல் ராசிபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ஜெயபாலனுக்கு சேந்தமங்கலம் வாக்குச்சாவடி அலுவலர் பணியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஏப். 7ஆம் தேதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ஆம் கட்ட பயிற்சியை முடித்து வரும் போது நிகழ்ந்த விபத்தில் ஜெயபாலன் உயிரிழந்தார்