தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை இல்லை என்று தெரிந்தால் 18ஆம் தேதியே தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற புகார் எண்ணுக்கு ஊழியர்கள் புகார் செய்யலாம் என்று கூறியுள்ளார். குடிமக்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக இருக்கும் வகையில் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.