அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கட்சியின் தயவால் தான் பாமக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்குள் செல்ல முடிந்தது. அதிமுக கூட்டணியால்தான் பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது என்று கூறினார். இதற்கு பாமக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கடந்த 1998-ம் ஆண்டு ராமதாசை தேடி வந்து கூட்டணி வைத்தது ஜெயலலிதா தான். 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாமக கூட்டணியால் தான் இபிஎஸ் ஆட்சியை தக்க வைக்க முடிந்தது என்று கூறினார். மேலும் பாஜக மற்றும் அதிமுகவுக்கு இடையே தற்போது வார்த்தை மோதல் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கட்டணிக்குள் விரிசல் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.