தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18, 20 தேதிகளில் மாலை 4:45க்கு தாம்பரத்தில் இருந்து கிளம்பும் ரயில் மறுநாள் குமரியை அடையும். குமரியில் இருந்து ஏப்.19, 21 இல் இரவு 8:30க்கு புறப்படும் ரயில் மறுநாள் சென்னையை அடையும். இதேபோல் ஏப்.18, 20 தேதிகளில் சென்னை – கோவைக்கும், ஏப். 19,21 இல் கோவை – சென்னைக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.