சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் தலைமை தேர்தல் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை சென்னை ஐசிஎப் மற்றும் தெற்கு ரயில்வேயில் தற்காலிகமாக பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டனர். இவர்கள் நீண்ட காலமாக பணி நிரந்தரம் வழங்காமல் வட மாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாகவும், இது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாலும் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினர்.

இவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று கூறினர். அதோடு அவரிடம் தங்கள் வாக்காளர் அட்டையை ஒப்படைத்து தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் கூறி அத்துமீறி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். இவர்களை அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு 75 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.