புதுச்சேரியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கும் தமிழ்வேந்தன் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ஓட்டுக்கு ரூ.500ம், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ரூ.200ம் கொடுக்கின்றனர்.

நேர்மையாக நடைபெற வேண்டிய இந்த தேர்தலை இவர்கள் கொச்சைப் படுத்திவிட்டனர். பணம் கொடுத்து ஜெயிக்கும் நிலைமை இருப்பதால் இந்த தேர்தலை புறக்கணிக்க உள்ளேன்” எனக் கூறினார்.