தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்..

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, நெல் விவசாயிகளுக்கு 52.02 கோடி ரூபாய் செலவில் தார்பாய்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை வேளாண் துறை அமைச்சர் நிறைவேற்றினாரா? என்றும், நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 2500 ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி என்னவானது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை திமுக அரசு வஞ்சிக்கிறது. 22 சதவீதம் ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமிழக பாஜக துணை நிற்கும் என்று தெரிவித்தார்..